சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளளாம். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் கொள்கைளை வளைத்துக் கொள்ளலாம்.

இருமுறை அதிமுகவுடன் அணி சேர்ந்து பின்னர் வெளியேறி திமுகவுடன் சேர்ந்து அரசியல் செய்து வந்த பாமக இப்போது மீண்டும் ஒரு முறை அதிமுகவுடன் சேர்ந்துள்ளது.

இந்த நேரத்தில் சில பழைய நினைவுகள் மனதில் வந்து போவதை தடுக்க முடியவில்லை.

2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியிலிருந்து படு வேகமாக வெளியேறியது பாமக. அப்போது டாக்டர் ராமதாஸ் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை இது...

டாக்டர் ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தனது சொந்த நலன்ளுக்காக அவர் கூட்டணிகளை உருவாக்குவார், கூட்டணியிலிருந்து விலகுவார், கூட்டணிகளை உடைப்பார்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதற்காக பொருத்தமில்லாத காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்

நான் அவர்களுக்கு ராஜ்யசபா சீட் தருவேன் என்று ஒருபோதும் கூறியதில்லை. தேர்தலுக்கு முன்பாக ராஜ்யசபா சீட் தர வேண்டும் என ராமதாஸ் கேட்கவும் இல்லை. நானும் உறுதி அளிக்கவும் இல்லை.

சட்டசபைத் தேர்தலுக்கு மட்டும்தான் நாங்கள் கூட்டணி அமைத்தோம். ராஜ்யசபா தேர்தல் குறித்து நாங்கள் பேசவே இல்லை

அதிமுகவுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பிருந்த தொகுதிகளைத்தான் பாமகவுக்கு நாங்கள் விட்டுக் கொடுத்தோம். அவர்களுக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை நாங்கள் தரவில்லை.

ராமதாஸ் விருப்படியேதான் சீட் ஒதுக்கப்ட்டது. கடந்த சட்டசபையில் பாமகவுக்கு நான்கு இடங்கள் மட்டுமே. இந்த தேர்தலில் 20 சீட்கள் கிடைத்துள்ளது. இதை ராமதாஸ் உணர வேண்டும்.

1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாமகவை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக பாமகவை அனுப்பி வைத்தது நான்தான் என்பதை ராமதாஸ் மறக்கக் கூடாது.

கூட்டணிக் கட்சித் தலைவர்களை நான் ஒரு போதும் அவமரியாதை செய்ததில்லை. மணிக்கணக்கில் அவர்களை காத்திருக்க வைத்து அவமரியாதை செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை.

ராமதாஸ் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு பொருத்தமான காரணங்களை ஒருபோதும் கூறுவதில்லை

1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போதும் அவர் சில மாதங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றார். அதற்கும் அவர் பொருத்தமான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. இப்போதும் விலகியுள்ளார். இதற்கும் பொருத்தமான காரணம் எதையும் அவர் சொல்லவில்லை.


1998ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் என்னை மட்டும் அழைத்திருந்தார் வாஜ்பாய். நான்தான் அவரிடத்தில் சொல்லி, டாக்டர் ராமதாஸ் உள்பட அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் அழையுங்கள் என்று எடுத்துக் கூறினேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.
edit post

Comments

1 Response to ''ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி': ஜெ. அன்று சொன்னது!'

  1. எட்வின்
    http://vsramesh.blogspot.com/2009/03/blog-post_26.html?showComment=1238127900000#c4587291081806377470'> March 26, 2009 at 9:25 PM

    அரசியல்ல யார் தான் சந்தர்ப்பவாதி இல்ல !! ;)

     

Post a Comment