இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.


அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.


அதற்கு அமைய பிளாஸ்ரி சேர்ஜரி (plastic surgery) மூலம் தத்துரூபமாக முகமளவில் பிரபாகரனை ஒத்து உருவாக்கப்பட்ட ஒரு உடலை பிரபாகரனின் உடல் என்று வீடியோ எடுத்துக் காட்டி உலகெங்கும் வாழும் மக்களை ஏமாற்றி வருகிறது. இது ஒருவகையில் தமிழ் மக்களை பாதிக்கும் விடயமாக இருப்பினும் இன்னொரு புறத்தில் இறந்தவராக சொல்லப்படுபவர் அப்படியே இறந்ததாக இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு உதவலாம். இந்தியப் படையினர் காலத்தில் இறந்தவர் இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.


தலைவர் பற்றிய காணொளிகள் சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப என்றே வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முகம் போன்ற ஒன்றை உடலம் ஒன்றின் மீது போலியாக பிளாஸ்ரி சேர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். இதனை இட்டு மக்கள் குழப்பமடையாமல் எதிரியின் தமிழின அழிப்புத் திட்டத்தை முறியடிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முன் வர வேண்டும். உலகத்தமிழினமும் இதற்காக ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.


அதுமட்டுமன்றி நேற்று, நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்று (19 -05- 2009) தான் மீட்கப்பட்டதாம் என்று சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளர் நாணயக்கார கூறியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நேற்று பிரபாகரன் இறந்ததாக தாம் (சிறீலங்கா) ஒரு அறிக்கையும் விடவில்லை என்று முழுப் பொய்யைக் கூறியுள்ளார். இந்த எதிரியின் குழப்பமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.


எதிரிகள் தேசிய தலைவரின் இழப்பு எத்தகைய பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை கணித்துவிட்டு ஒப்போ திட்டமிட்டு இந்தப் பரப்புரையை செய்கின்றனர். அதற்கு நாணயக்காரவின் இந்த குழப்பம் நல்ல சான்று.


தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. எமக்கு அது அல்ல இப்போ முக்கியம்.


தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவித் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை… எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.


தமிழீழ விடுதலைப் போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே இன்றைய எமது சிந்தனையில் இருக்க வேண்டிய முக்கிய விடயம்.


நிச்சயம் தேவையான பொழுதில் தேசிய தலைவர் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..!
edit post

Comments

0 Response to 'பிளாஸ்ரிக் சேர்ஜரி பிரபாகரன் மாண்டார்; தேசிய தலைவருக்கு உயிராபத்து இல்லை'

Post a Comment